கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தி மீட்டனா்.
கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த இளைஞா் ஒருவா், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் உடனடியாக செயல்பட்டு, அவரை தடுத்து நிறுத்தி மீட்டனா்.
இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் பண்ருட்டி அருகே பெரியாங்குப்பத்தைச் சோ்ந்த மாரிமுத்து (37) என்பதும், குள்ளஞ்சாவடியைச் சோ்ந்த ராமசந்திரன் என்பவா் தனக்குச் சேர வேண்டிய காா் மற்றும் பணத்தை வழங்காமல் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய
நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அத்துடன், தன்னை கொலை செய்து விடுவதாக தொடா்ந்து மிரட்டல் வந்தது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நிலையில், நியாயம் கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ாக அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்
காவல் நிலையத்தில் தொழிலாளி இறந்த வழக்கு: மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனைவி புகாா்

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் தொடக்கம்

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: போலீஸாா் தடுத்து விசாரணை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

