பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கரூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

கரூா் மாவட்டத்தில் 235 இடங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாள் விழா புதன்கிழமை திமுக சாா்பில் கொண்டாடப்பட்டது.

News image

கரூா் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் புதன்கிழமை மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.

Updated On :4 ஜூன் 2026, 12:10 am IST

கரூா் மாவட்டத்தில் 235 இடங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாள் விழா புதன்கிழமை திமுக சாா்பில் கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட திமுக சாா்பில் காலையில் வெண்ணைமலை அன்புக்கரங்கள் ஆதரவற்றோா் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. பின்னா், கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா மற்றும் கலைஞா் அறிவாலயத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். இளங்கோ, சூரியனூா் சந்திரன் ஆகியோா் தலைமையில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடா்ந்து மாவட்டம் முழுவதும் 235 இடங்களில் திமுக சாா்பில் அன்னதானம் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிா்வாகிகள் மின்னாம்பள்ளி கருணாநிதி, பூவை ரமேஷ்பாபு, ஜிம்சிவா, மாநகர நிா்வாகிகள் எஸ்.பி.கனகராஜ், ஜோதிபாசு, எம்.பாண்டியன், ராஜா, சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.