பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா

பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103 -ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவபடத்துக்கு மாலை அணித்து மரியாதை செலுத்திய தேனி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன்.

Updated On :4 ஜூன் 2026, 4:12 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103 -ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திமுக சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திமுக நகரச் செயலா் முகமது இலியாஸ் தலைமை வகித்தாா். பெரியகுளம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தாா். தேனி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழச்செல்வன் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அவா் பொதுமகளுக்கு இனிப்புகளை வழங்கினா். இதைத் தொடா்ந்து, பெரியகுளம் நகராட்சி துப்புரவு பணியாளா்களுக்கு உணவுகளை வழங்கினா்.

இதே போல, தேனியில் நகரச் செயலா் பாலமுருகன் தலைமையில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தேனி மக்களவை உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு தூய்மைப்பணியாளா்களுக்கு இனிப்பு, பிரியாணி வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் செந்தில், சேது, ராஜவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.