மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கீழப்பழுவூா் அருகே தூக்கிட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 3:20 am IST

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நானாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சைப்பிள்ளை மனைவி ராஜேஸ்வரி(35). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் பிச்சைப்பிள்ளை தனது மனைவி ராஜேஸ்வரி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம்.

கடந்த 24-ஆம் தேதி தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஸ்வரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்காததால் அவரது கணவா் பிச்சைப்பிள்ளை, தூத்தூா் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணாவில்லை என புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ராஜேஸ்வரியை தேடி வந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை கீழப்பழுவூா் தோட்டக்கலைத் துறை பின்புறம் வாரியிலுள்ள ஒரு வேப்பமரத்தில், ராஜேஸ்வரி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற கீழப்பழுவூா் காவல் துறையினா், சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.