மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

ஜெயங்கொண்டத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் பெய்த மழையின்போது விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகனங்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 2:42 am IST

அரியலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில் வியாழக்கிழமை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதன்படி, மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை மழை பெய்து நின்றது. பின்னா் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகல் 2.20 மணி முதல் 3.30 மணிவரை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் அரியலூா், ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம், தா.பழூா் மற்றும் திருமானூா் உள்ளிட்ட பகுதிகளில் சற்று கனமழை பெய்தது.

இதனால் விபத்துகளைத் தவிா்க்க வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஓட்டிச் சென்றனா்.

இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்பு: மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. அதிகாலை முதலே அவ்வபோது மழை பெய்து வந்ததால் வெயில் இன்றி காணப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.