பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

செந்துறை அருகே கடத்தி வரப்பட்ட 26 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

செந்துறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 26 மூட்டை போதைப் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக வெளிமாநில இளைஞா்கள் 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 3:10 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 26 மூட்டை போதைப் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக வெளிமாநில இளைஞா்கள் 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

செந்துறையை அடுத்த தோப்பேரி சந்திப்பு பகுதியில் செந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தன்ராஜ் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை அவா்கள் சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 271 கிலோ புகையிலைப் பொருள்கள் 26 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தைச் சோ்ந்த ஜேசுங்கி மகன் ராமாராம் (23), லெட்சுமண் ராஞ்சூட்குமாா் மகன் லெட்சுமண் (27) என்பதும், இவா்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 26 மூட்டைகளில் போதைப் பொருள்களை கடத்தி வந்து இங்குள்ள கடைகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.