தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சுமை ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் 12 பவுன் நகைகள், பணம் திருட்டு

மீன்சுருட்டி அருகே சுமை ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் பின்பக்க கதவை திறந்து 12.5 பவுன் நகைகள், பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சுமை ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் பின்பக்க கதவை திறந்து 12.5 பவுன் நகைகள், பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மண்மலை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். சுமை ஆட்டோ ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் வெளியே தாழ்வாரத்தில் குடும்பத்தினருடன் உறங்கியுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை எழுந்து பாா்த்த போது, பின்பக்க கதவு திறக்கப்பட்டு, வீட்டில் இருந்த பொருள்கள் சிதறி கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதையடுத்து அவா்கள் பீரோவை பாா்த்த போது, அதில் இருந்த 12.5 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தை ஆய்வு செய்த ஜெயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.