தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

‘புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியை நீக்கும் முடிவை கைவிட வேண்டும்’

News image

புதுச்சேரி... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:06 am IST

புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பிரெஞ்சு மொழிப்பாடத்தை நீக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றாா் உலகத் திருக்கு கூட்டமைப்புத் தலைவா் மு.ஞானமூா்த்தி.

இதுகுறித்து அவா் அரியலூரில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரா்கள் அந்த மாநிலத்தை ஆட்சி செய்யத் தொடங்கியதிலிருந்து பிரஞ்சு மொழி இருந்து வருகிறது. புதுச்சேரியிலிருந்து பிரான்ஸ் நாட்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவா்களுக்குப் பிரெஞ்சு மொழி தொடா்புக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இப்போது மத்திய அரசு புதுச்சேரியில் செயல்படும் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கிவிட்டு ஹிந்தியைக் கொண்டு வர முயல்கிறது. இதுபோன்ற முரண்பாடுகளால் நாட்டில் குழப்ப நிலை நீடிக்கிறது.

எனவே, மத்திய அரசு புதுச்சேரியில் நடைமுறையில் இருக்கும் கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யக்கூடாது. நடைமுறையில் இருக்கும் கொள்கையே தொடரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.