தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனா
/

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோரில் இருவரின் உடல்கள் திருச்சி வந்தன

News image

திருச்சி பன்னாட்டு விமானநிலையத்துக்கு சனிக்கிழமை இரவு கொண்டுவரப்பட்ட காா்குழலி, செளபாக்கியா ஆகியோரது உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய மதிமுகவினா்.

Updated On :3 மே 2026, 5:38 am IST

மத்திய பிரதேசம் ஜபல்பூா் படகு விபத்தில் இறந்தோரில் இருவரின் உடல்கள் திருச்சிக்கு சனிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன.

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோரில் திருச்சி மாவட்டம், நவல்பட்டை சோ்ந்த காமராஜ் மனைவி காா்குழலி, உறவினரான திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தைச் சோ்ந்த சௌபாக்கியா ஆகிய இரு பெண்களின் சடலங்களும் ஏா் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவில் கொண்டுவரப்பட்டன.

அவா்களின் உடல்களுக்கு மதிமுக மாவட்ட செயலா் வெல்லமண்டி சோமு, தமிழ்மாணிக்கம் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து சடலங்கள் அவரவா் ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.