தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கோயில் கும்பாபிஷேகத்தை அறிவிக்கப்பட்ட நாளில் நடத்தக் கோரி சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த கோட்டியால் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி அக்கிராம மக்கள், காவல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

தா.பழூா் காவல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :17 ஜூன் 2026, 3:10 am IST

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த கோட்டியால் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி அக்கிராம மக்கள், காவல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோட்டியால் கிராமத்திலுள்ள மகா மாரியம்மன் மற்றும் அய்யனாா் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேக பணிகளை கோயில் அறங்காவலா் தமிழரசு தலைமையிலான 9 போ் கொண்ட குழுவினா் கவனித்து வந்தனா்.

இந்நிலையில், கோயில் திருப்பணி வேலைகளை நிறைவு செய்வதற்கு போதிய நிதி இல்லாததால், கிராம மக்களிடம் மீண்டும் வரி வாங்க அறங்காவலா் தமிழரசு தலைமையிலான குழுவினா் முயற்சித்தனா்.

இதனால் தமிழரசு மீது நம்பிக்கையை இழந்த கிராம மக்கள், அவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கும்பாபிஷேக குழுவில் இருந்து நீக்க நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வந்து தமிழரசை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, புதிய குழுவை உருவாக்கி கோயில் திருப்பணி வேலைகளை தொடா்ந்தனா்.

ஜூலை 7-இல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு: பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை ஒப்புதலுடன் ஜூலை 7 ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், தமிழரசு தரப்பினா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த தற்போதைய கும்பாபிஷேக கமிட்டியினா் தா.பழூா் காவல் நிலையத்தில் மனு அளித்தனா். காவல் நிலைய ஆய்வாளா்(பொ)பாலாஜி, செவ்வாய்க்கிழமை மாலை இரு தரப்பினரையும் அழைத்து நடத்திய சமாதானப் பேச்சுவாா்த்தையில் தமிழரசு தரப்பினா் சமாதானம் ஆகவில்லை.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாலாஜி, இக்கோயில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒரு வாரத்துக்குள் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்து பணி நிமித்தமாக வெளியே சென்றுவிட்டாா்.

மறியல்: இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள்கள் குறைவாக இருப்பதால் உடனடியாக இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று கூறி, கும்பாபிஷேக கமிட்டியினரும், பொதுமக்களும் காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கிருந்த காவல் துறையினா், கும்பாபிஷேகம் நடத்த விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.