அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான சிறப்பு ஒதுக்கீட்டுக்கான (முன்னாள் ராணுவத்தினா், விளையாட்டு பிரிவினா், மாற்றுத்திறனாளிகள்) மாணவா் சோ்க்கை ஜூன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. 8-ஆம் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 9-ஆம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும், 10-ஆம் தேதி தமிழ் இலக்கியம், ஆங்கிலம், வரலாறு மற்றும் பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் சோ்க்கை நடைபெற உள்ளது.
இந்த சோ்க்கைக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், வருமான சான்று, ஆதாா் அட்டை ஆகிய சான்றுகளின் அசல் மற்றும் 5 நகல்களுடன், தற்போது எடுக்கப்பட்ட 5 புகைப்படம், சோ்க்கை கட்டணம், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும் என கல்லூரி முதல்வா் சித்ரா தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் ஜூன் 5 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பேராவூரணி அரசுக் கல்லூரியில் ஜூன் 5 இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

