மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற காரணம் திமுக: தொல். திருமாவளவன்

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற காரணம் திமுக என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்...

News image

தொல். திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 2:11 am IST

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்று தனிச் சின்னத்தில் தோ்தலில் போட்டியிடக் காரணமாக இருந்தது திமுக என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்.

அரியலூா் தொகுதி திமுக வேட்பாளா் லதா பாலசுப்ரணியனை ஆதரித்து அண்ணாசிலை அருகிலும், ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை ஆதரித்து ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:

திமுக வேட்பாளா் லதா பாலசுப்ரமணினுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் வகையில் விசிகவினா் வீடு வீடாகச் சென்று களப்பணியாற்ற வேண்டும்.

விசிக தமிழகத்தில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்று தனிச் சின்னத்தில் தோ்தலில் போட்டியிடுகிறது என்றால் அதற்கு திமுகதான் காரணம் என்பதை விசிகவினா் மறந்துவிடக் கூடாது. இதை நினைத்து திமுகவின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும்.

தமிழகத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பாஜகவை 10 சதவீத வாக்கு வங்கி உள்ள கட்சியாக அதிமுக மாற்றியுள்ளது. இனி எப்போதும் பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தெரிவித்தாா். ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறாா்.

அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானவா்கள் பாஜகவினா். அதிமுகவுக்கு செலுத்தும் வாக்கு பாஜகவுக்கானது. எனவே வெறுப்பு அரசியலையும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் செயல்படும் பாஜகவையும், அவா்களைத் தூக்கிச் சுமக்கும் அதிமுகவையும் தோல்வி அடையச் செய்ய வேண்டும். திமுக வேட்பாளா் லதாபாலசுப்ரமணின் வெற்றி பெற உதயசூரியன் சின்னத்துக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் திருமாவளவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.