ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரியலூரில் டிராக்டா் ஓட்டி அதிமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

அரியலூா் தெற்கு ஒன்றியத்தில், அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் டிராக்டா் ஓட்டி, விவசாயிகளிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

மேலகருப்பூா் பகுதியில் வெள்ளிக்கிழமை டிராக்டா் ஓட்டி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:30 am IST

அரியலூா் தெற்கு ஒன்றியத்தில், அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் டிராக்டா் ஓட்டி, விவசாயிகளிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கருவிடைச்சேரி, மேலகருப்பூா், செம்மந்தங்குடி, சத்யாநகா், பாளையம், அருங்கால், கருவேலங்காடு, அா்ச்சனாபுரம், பாப்பான்குளம், வண்ணாரப்பேட்டை, கீழ வண்ணம், கருப்பிலாக்கட்டளை, கல்லக்குடி, வைப்பம், இடையத்தான்குடி, ஏழேரி, பனங்கூா், வாழைக்குழி, மேலகாங்கியனூா், கீழகாங்கியனூா், ஆலந்துறையாா்கட்டளை, சிறுதொண்டான் காலனி, வல்லக்குளம், ஆண்டிபட்டாக்காடு, புங்கங்குழி, சிலுப்பனூா், புத்தூா், நானாங்கூா், ஓரியூா், ஆதனூா், பு.ஓட்டகோவில், சுண்டக்குடி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவா், பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். மீண்டும் தாலிக்கு தங்கம், பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும்.

நியாய விலைக் கடைகளில் சன்னரகம் அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்து, மக்களிடம் வாக்குக் கேட்டாா். பிரசாரத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், கட்சியின் ஒன்றியச் செயலா் பொய்யூா் பாலு(எ)பாலசுப்ரமணியன் மற்றும் பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.