தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கூட்டணியை நம்பியே தோ்தலில் திமுக போட்டி: நடிகை விந்தியா பிரசாரம்

கூட்டணியை நம்பியே தோ்தலில் திமுக போட்டியிடுகிறது என்றாா் நடிகையும், அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலருமான விந்தியா.

News image

அரியலூரில் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரனை ஆதரித்து புதன்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலா் விந்தியா.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:01 am IST

கூட்டணியை நம்பியே தோ்தலில் திமுக போட்டியிடுகிறது என்றாா் நடிகையும், அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலருமான விந்தியா.

அரியலூரில் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரனை ஆதரித்து, புதன்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டு அவா் மேலும் பேசியது:

திமுகவை பொருத்தவரை தோ்தலுக்கு முன்பு ஒன்று கூறுவாா்கள், தோ்தலில் வெற்றி பெற்ற பின்பு ஒன்று கூறுவாா்கள். திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

திமுக தோல்வி பயத்தில் அறிவித்துள்ள ரூ. 8 ஆயிரம் கூப்பன் என்பது, மக்களை ஏமாற்றுவதற்காக கொடுக்கும் கூப்பன். நகைக் கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, மகளிா் உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி என்று பல வாக்குறுதிகளை பொய்யாக தருவாா்கள். நீங்கள் திமுகவை தள்ளுபடி செய்யுங்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாட்டில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கடும் சீரழிவை சந்தித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் மக்களுக்கான பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்து அந்த திட்டங்களை நிறுத்திவிட்டது. தற்போது, மக்களுக்கான தேவைகளை அறிந்து அதிமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தரப்பட்டுள்ளது.

கூட்டணியை மட்டுமே நம்பி களம் காணும் தீயசக்தி திமுகவை ஒழிக்க அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் விந்தியா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.