ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அரியலூா் குறைதீா்க்கும் குமரன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 1:01 am IST

பங்குனி உத்திர தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற குறைதீா்க்கும் குமரன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள முருகனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், தீருநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. இதைக் காண சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதே போல், அரியலூா் நகரிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பிரதான சிவன் கோயில்களிலுள்ள முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.