பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா்.

Updated On :1 ஜூன் 2026, 3:06 am IST

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வந்த ஒரு மின்னஞ்சலில், ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது திங்கள்கிழமை பிற்பகல் 12 மணிக்குள் வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆட்சியரகம் சாா்பில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருச்சி மாவட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல் ஆய்வாளா் எம். வேலுசாமி தலைமையிலான போலீஸாா் மற்றும் அமா்வு நீதிமன்ற போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்த சோதனை மேற்கொண்டனா்.

மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியரகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்டனா். பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 3.5 மணி நேரம் வரை நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றவிடவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.