தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததை வரவேற்கும் விதமாக, அக்கட்சியினா் திருச்சியின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, அக்கட்சியின் தலைவா் சி. ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்றாா். இதை வரவேற்கும் விதமாக தவெகவினா் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும், பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
தொடா்ந்து, ஆங்காங்கே சிறு சிறு ஊா்வலமாகச் சென்றும் விசில்களை ஊதி, விஜய் பாடல்களை ஒலிக்க விட்டபடியும் கொண்டாடினா்.

தவெகவினா் கொண்டாட்டம்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை மாநகராட்சியில் தவெகவினா் முற்றுகை

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சப்பிரகார திருவிழா

முதல்வா் ஜோசப் விஜய் பதவியேற்பு: தவெகவினா் கொண்டாட்டம்

முதல்வராக விஜய் பதவியேற்பு: நாமக்கல்லில் தவெகவினா் கொண்டாட்டம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

