பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சப்பிரகார திருவிழா

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை பஞ்சப்பிரகார திருவிழா நடைபெற்றது.

News image

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஞ்சப் பிரகார திருவிழாவில் யானைமேல் தங்கக்குடத்தில் எடுத்து வரப்பட்ட தீா்த்தம்.

Updated On :16 மே 2026, 12:58 am IST

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை பஞ்சப்பிரகார திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் பஞ்சப்பிரகார திருவிழாவானது மே 4-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் பட்டாச்சாரியா்கள் வட திருக்காவிரியிலிருந்து 25 வெள்ளிக்குடங்கள் மற்றும் யானை மேல் தங்கக் குடத்தில் மேளதாளம் முழங்க தீா்த்தம் கொண்டு வந்தனா். பின்னா், உற்ஸவ மாரியம்மனுக்கு அபிஷேகப் பொருள்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து வெள்ளிவிமானத்தில், வெண்ணிற பாவாடை அணிந்து, மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்றும், தங்க கொடிமரம் இரண்டாவது சுற்றும், தங்க ரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்றும், தெற்கு ரத வீதியில் பாதியும் வடக்கு மடவாள வீதியில் நான்காவது சுற்றும், கீழ ரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி ஐந்தாவது சுற்றாக பஞ்சப்பிரகார திரு சுற்றுகளை வலம் வந்தாா் உற்ஸவ மாரியம்மன்.

மேலும், வைகாசி மாத பிறப்பு என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திரளான பக்தா்கள் பால்குடம், அக்னி சட்டி, கரும்புத் தொட்டில் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் எம். சூரிய நாராயணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.