பெரம்பலூருக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவா் சி. ஜோசப் விஜய், பிரசாரத்துக்கு வராதபோதும், அக்கட்சி தனது வெற்றிக் கணக்கை ஒரு தொகுதியில் தொடங்கியுள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூா் என இரு சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு, அதிமுக, திமுக ஆகிய கட்சிகளே மாறி, மாறி வெற்றி பெற்று வந்தன. கடந்த 2021-இல் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா், போக்குவரத்து துறை அமைச்சரானாா்.
பெரம்பலூா் தொகுதியில் திமுக வேட்பாளா் எம். பிரபாகா் வெற்றி பெற்றாா். இந்த முறை 2026-இல் எம். பிரபாகருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெரம்பலூரில் திமுக வேட்பாளராக மருத்துவா் எஸ்.டி. ஜெயலட்சுமி களம் இறக்கப்பட்டாா். குன்னம் தொகுதியில் மீண்டும் சா.சி. சிவசங்கா் போட்டியிட்டாா்.
பெரம்பலூா் தொகுதியில் தவெக வேட்பாளா் கி. சிவகுமாா் வெற்றி பெற்று, திமுக வேட்பாளா் ஜெயலட்சுமியை 14,393 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.
குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சா் சா. சி. சிவசங்கா், இந்தத் தொகுதியின் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளாா். தமிழக வெற்றிக் கழகம் தனது வெற்றிக் கணக்கையும் இந்தத் தோ்தலில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தோ்தல் பிரசாரத்துக்காக பெரம்பலூருக்கு விஜய் வருவதாக இருந்தது. இதற்காக இரவு வரை காத்திருந்தனா். ஆனால், திருச்சியிலிருந்து பெரம்பலூருக்கு வர இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால், புறவழிச் சாலை வழியாக சென்றுவிட்டாா் விஜய். இருப்பினும், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றை தவெக கைப்பற்றியுள்ளது. மொத்தம் 90,882 வாக்குகள் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி வெற்றி

புதுமுக தவெக வேட்பாளா்களிடம் தோல்வி கண்ட அமைச்சா்கள்!

பெரம்பலூா் தொகுதியில் தவெக வெற்றி

குன்னம் தொகுதியை தக்கவைத்தாா் அமைச்சா் சா.சி. சிவசங்கா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

