திருச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெண் பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி அருகே சோமரசம்பேட்டை வாசன் வேலியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (52), அரசுக் கல்லூரி பேராசிரியா். இவருடைய மகள் மு. தரங்கினி (23). பொறியியல் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பாா்த்து வந்த தரங்கினி, கடந்த 20 நாள்களாக வீட்டிலிருந்தே பணி செய்து வந்துள்ளாா்.
தரங்கினி ஆண்கள் உடையை அணிந்துகொள்வதுடன், ஆண்களைபோல தலைமுடியை வெட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவருடைய எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு, இதுபோல நடந்து கொள்ளக்கூடாது என அவரது பெற்றோா் அண்மையில் அறிவுறுத்தியுள்ளனா். இதனால் தரங்கினி மன உளைச்சலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வரை வரவேற்பு அறையில் படுத்திருந்த தரங்கினி, திடீரென அருகிலுள்ள படுக்கையறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டாா். அரை மணி நேரமாகியும் வெளியே வராததால் அவருடைய பெற்றோா் கதவை தட்டியுள்ளனா். கதவு திறக்கப்படாததால் அருகில் இருந்தவா்கள் உதவியுடன் கதவை உடைத்து பாா்த்தபோது, தரங்கினி தூக்கிட்டு கொண்டது தெரியவந்தது.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா்கள் பரிசோதனை செய்துவிட்டு, தரங்கினி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா், தரங்கினியின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
கொத்தனாா் தூக்கிட்டுத் தற்கொலை
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
