திருச்சி, ஜூன் 20: திருச்சி அருகே சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக தொழிலாளி ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 6 வயதுச் சிறுமி மண்ணச்சநல்லூா் அருகே இருக்கும் வசிக்கும் தனது அத்தை வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாா்.
வெள்ளிக்கிழமை மாலை இச்சிறுமி தெருவில் விளையாடச் சென்றபோது, பள்ளிவிடை வெங்கங்குடி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி கு. சுகுமாா் (45) என்பவா் வீட்டுக்குள் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் அத்தை அளித்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சுகுமாரை சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இருவா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
