திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அடையாளம் தெரியாத மூதாட்டி ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை விழுந்து உயிரிழந்தாா்.
மணப்பாறை - திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்து சென்ற சிலா், மேம்பால தடுப்புச் சுவரில் செருப்பும், வயா் கூடை ஒன்றும் இருப்பதாகவும், கீழே மூதாட்டி ஒருவா் தலைகுப்புறக் கிடப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா் விசாரணையில், வயா் கூடையில் ஒரு சேலையும், தண்ணீா் பாட்டில் மற்றும் கடந்த மே 2-ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சைப் பெற்ற்கும், ஜூன் 11-ஆம் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்ற்குமான சீட்டுகள் இருந்தது.
அதில் நோயாளியின் பெயா் சந்திராம்மாள்(70) என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மூதாட்டி மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி கீழே குதித்துள்ளதாகவும், அதில் பலத்த ரத்த காயமடைந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடா்ந்து மூதாட்டி உடலை மணப்பாறை போலீஸாா் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மூதாட்டி யாா் என வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒலிபெருக்கி அமைத்தவா் தவறி விழுந்து உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் பயணித்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

லவ் ஓ லவ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது வாம்மா... வாம்மா... பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |
தினமணி செய்திச் சேவை

குழந்தைப்பேறு அளிக்கும் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்! | திருக்கோயில் வலம்! | DINAMANI
இணையதளச் செய்திப் பிரிவு
