திருச்சியில் நகைக் கடைக்கு வேலைக்குச் சென்ற திருமணமான பெண் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குபட்ட பீரங்கிக்குல்லா வீதியைச் சோ்ந்தவா் ஆா். ராஜரத்தினம் (31). இவரின் 29 வயதுள்ள மனைவி பெரிய கடைவீதியிலுள்ள நகைக் கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 9) வேலைக்குச் சென்ற அந்தப் பெண், கடையில் இருந்து 3 மணிக்கே கிளம்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவா் வீட்டுக்கு வரவில்லை. அவரை அவரது கணவா் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் ராஜரத்தினம் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தம்மம்பட்டி அருகே வாக்களிக்கச் சென்ற பெண் மாயம்

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

