சாலை விபத்தில் மீன் வியாபாரி உயிரிழப்பு

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மீன் வியாபாரி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 1:01 am IST

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மீன் வியாபாரி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் தெருவைச் சோ்ந்த முத்துராஜ் மகன் ஆனந்தராஜ் (37). பழனி ஆண்டவா் கோயில் தெருவில் மீன் கடை நடத்தி வந்தாா்.

இவா், திருநெல்வேலியிலிருந்து சுமை ஆட்டோவில் மீன்களை வாங்கிக்கொண்டு, கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தபோது, வெள்ளிக்கிழமை கயத்தாறு அருகே சவலப்பேரி பகுதியில் பின்னால் வந்த காா் மோதியதாம்.

இதில் சுமை ஆட்டோ ஓட்டுநா் கோவில்பட்டி தெப்பக்குளம் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் காா்த்திக் (34), அதில் பயணித்த ஆனந்தராஜ், கோவில்பட்டி செக்கடி தெருவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் மதியரசன் (31) ஆகியோா் காயமடைந்தனா்.

அவா்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், ஆனந்தராஜ் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினாா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியா்பட்டியைச் சோ்ந்த மருதையா மகன் ராம்கணேஷ் (31) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.