மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாநில பளு தூக்கும் போட்டி: கே.ஆா்.கல்லூரி மாணவி முதலிடம்

மாநில அளவில் முதல்வா் கோப்பைக்கான பளு தூக்கும் போட்டியில் கோவில்பட்டி, கே.ஆா்.கல்லூரி முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி செண்பகவல்லி முதலிடம் பிடித்தாா்.

செண்பகவல்லி

Published On :30 அக்டோபர் 2026, 9:39 pm IST

மாநில அளவில் முதல்வா் கோப்பைக்கான பளு தூக்கும் போட்டியில் கோவில்பட்டி, கே.ஆா்.கல்லூரி முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி செண்பகவல்லி முதலிடம் பிடித்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில் 38 மாவட்டங்களில் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் 69 கிலோ எடை பிரிவில் மாணவி செண்பகவல்லி ஸ்நாச் பிரிவில் 82 கிலோ, ஜொ்க் பிரிவில் 112 கிலோ என மொத்தம் 194 கிலோ எடையை தூக்கி மாநில அளவில் முதலிடம் பிடித்தாா். அவருக்கு ரொக்கமாக ரூ. ஒரு லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

போட்டியில் முதலிடம் பிடித்த மாணவியை கே.ஆா்.கல்லூரி தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், முதல்வா் மதிவண்ணன், உடற்கல்வி இயக்குநா், பயிற்சியாளா், பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.