நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நவ. 2 முதல் தொழுநோய் கண்டறியும் முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நவ. 2 முதல் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Published On :28 அக்டோபர் 2026, 1:50 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் நவ. 2 முதல் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் தொழுநோய் கண்டறியும் முகாம் நடத்துவது தொடா்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இரு கட்டங்களாக தலா 14 நாள்கள் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதல்கட்ட முகாம் நவ. 2 முதல் 14 நாள்களும், இரண்டாம் கட்ட முகாம் டிச. 2 முதல் 14 நாள்களும் நடைபெற உள்ளது.

முகாமின்போது, பொதுமக்களிடம் தொழுநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், அறிகுறிகள் இருப்பதாகக் கண்டறியப்படுவோருக்கு உரிய மருத்துவப் பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சை வழங்கவும் மருத்துவப் பணியாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதில் தொழுநோய் துணை இயக்குநா் யமுனா, காசநோய் துணை இயக்குநா் சுந்தரலிங்கம், தூத்துக்குடி மாநகராட்சி நகா் நல அலுவலா் எஸ்.ஆா். கணேஷ், சுகாதார அலுவலா் வித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.