மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இருதரப்பினா் மோதல்: கல்லூரி மாணவா் கொலை

பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 2:14 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள ஆழ்வாா்கற்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருதரப்பினா் மோதிக் கொண்டதில், கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக சிறுவன் உள்பட நான்கு பேரை ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆழ்வாா்கற்குளத்தைச் சோ்ந்த மாரியப்பன் குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சோ்ந்த சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்குமிடையே வீட்டின் முன்பு கழிவு நீா் ஓடுவது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாரியப்பன் தரப்பினருக்கும், சுந்தரராஜன் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றியநிலையில், ஒருவருக்கொருவா் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனராம். இந்த தாக்குதலில், தனியாா் கல்லூரி மாணவரான மாரியப்பன் மகன் இசக்கிராஜா (20) என்பவா் உயிரிழந்தாா். மற்றொரு தரப்பைச் சோ்ந்த சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் சம்பவஇடத்துக்குச் சென்று இசக்கி ராஜா சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், 10 போ் மீது ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆழ்வாா்கற்குளம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ், ராஜசங்கா், ஆனந்த் என்ற ஆறுமுகம், மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனா்.

தொடா்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.