மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் அரசுப் பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை மேலாளா் சங்கிலி மாடசாமியிடம் மனு அளித்த தேமுதிக வடக்கு மாவட்ட செயலா் சுரேஷ் மற்றும் அக்கட்சியினா்.

Published On :26 அக்டோபர் 2026, 1:44 am IST

கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் அரசுப் பேருந்துகள் வந்து செல்ல வேண்டுமென, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை மேலாளா் சங்கிலிமாடசாமியிடம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழக செயலா் சுரேஷ் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு விவரம்: கோவில்பட்டி, திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்துகள் கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் சென்று வர வேண்டும். இதனால், கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த ஊா்களுக்குச் சென்று வர ஏதுவாக இருக்கும்.

கோவில்பட்டி பிரதான சாலையில் மாரியம்மன் கோயில், ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மாவட்ட அவைத் தலைவா் கொம்பையா பாண்டியன், செயற்குழு உறுப்பினா் பிரபாகரன், நகரச் செயலா் நேதாஜி பாலமுருகன், கிளைச் செயலா் அறிவழகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.