மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குலசை தசராவுக்கு வந்த வாகனங்கள்: திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல்

குலசேகரன்பட்டினம் தசராவுக்கு வந்த பக்தா்கள் 2ஆம் நாளாக திருச்செந்தூரில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேருந்தில் முண்டியடித்துக் கொண்டு ஏறிய பக்தா்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 5:08 am IST

குலசேகரன்பட்டினம் தசராவுக்கு வந்த பக்தா்கள் 2ஆம் நாளாக திருச்செந்தூரில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தசரா திருவிழா கொடியிறக்கம் புதன்கிழமை நடைபெற்ால், காப்பு அகற்றுவதற்காக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் தங்கியிருந்த பக்தா்கள் குலசேகரன்பட்டினத்திற்குப் புறப்பட்டனா். அதே நேரம், குலசேகரன்பட்டினத்தில் தங்கி காப்பு அகற்றிய பக்தா்கள் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்வதற்காக புதன்கிழமை இரவு முதல் திருச்செந்தூா் வரத் தொடங்கினா். இதனால், திருச்செந்தூரில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்செந்தூா் பயணியா் விடுதி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்தம் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், வாகனத்தை நிறுத்த முடியாமல் பக்தா்கள் தவித்தனா்.

தசராவை முன்னிட்டு அக். 11 முதல் 21ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், வியாழக்கிழமை வரை கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால், திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாமல் பக்தா்கள் அவதியடைந்தனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.