மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வல்லநாடு, முறப்பநாடு பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி, மாணவா் விடுதி மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப் பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Published On :15 அக்டோபர் 2026, 4:59 am IST

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி, மாணவா் விடுதி மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வல்லநாடு மற்றும் முறப்பநாடு பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சி மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, வல்லநாடு அரசு மாதிரிப் பள்ளி மற்றும் மாணவா் விடுதியில் ஆய்வு செய்து, அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், கீழ் தாமிரவருணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்டத்தின் சாா்பில் நடைபெறும் வடகிழக்குப் பருவமழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா். முறப்பநாடு ஆற்றுப்படுகை, அகரம், வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளைப் பாா்வையிட்டு, தண்ணீா் வரத்து, தற்காலிக வெள்ளப் பாதிப்பு நிவாரண முகாம்கள் ஆகியவை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, கிள்ளிகுளம் வ.உ.சி. அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப் பாலம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, வேளாண்மைக் கல்லூரி முதல்வா் மா. தேரடி மணி, கீழ் தாமிரவருணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் தங்கராஜன், உதவிப் பொறியாளா் அஜ்மீா்கான், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மனோரஞ்சிதம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் தாஹிா் அஹமது உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.