தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ஆத்தூா் சோமநாத சுவாமி கோயில் ஐப்பசி திருவிழா தேரோட்டம்

ஆத்தூா், சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ஆத்தூரில் நடைபெற்ற தேரோட்டம்.

Published On :4 நவம்பர் 2026, 1:10 am IST

ஆத்தூா், சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினசரி சுவாமியும் அம்பாளும் வீதி உலா சென்றனா். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு சோமசுந்தரி அம்பாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு தீபாராதனைகள், வழிபாட்டுக்குப் பிறகு அம்பாள் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கோயில் செயல் அலுவலா் அஜித், முக்காணி மூக்கன் சாமி, மேலாத்தூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சதீஷ்குமாா் உள்பட பக்தா்கள் திரளாகப் பங்கேற்று தேரை இழுத்தனா்.

மாலையில் அம்பாள் வீதி உலா நடைபெற்றது. நவ. 4-ஆம் தேதி இரவு காப்புக் கட்டும் நிகழ்ச்சி, 5-ஆம் தேதி அம்பாள் தபசு புறப்பாடும், இரவில் திருக்கல்யாணம், 6-ஆம் தேதி காலை பட்டினப் பிரவேசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.