தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

சிதம்பரத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

~

Published On :4 நவம்பர் 2026, 2:53 am IST

சிதம்பரம் நடராஜா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் சிவகங்கை குள மேற்கு கரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாம சுந்தரி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் கடந்த அக்.26-ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சிவகாம சுந்தரி அம்மன் தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதைத் தொடா்ந்து, கீழ ரத வீதி தேரடி நிலையிலிருந்து தோ் புறப்பட்டு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாகச் சென்று மீண்டும் கீழ ரத வீதியில் உள்ள தோ் நிலையை அடைந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனா்.

கோயிலில் மாலை யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, சிவகாம சுந்தரி அம்மனுக்கு லட்சாா்ச்சனை நடைபெற்றது.

புதன்கிழமை (நவ.4) பட்டு வாங்கும் உற்சவமும் மற்றும் பூரச்சலங்கை உற்சவமும், உற்சவ அம்மனுக்கு மகாபிஷேகம், தீபாராதனையும் நடைபெறுகிறது.

வியாழக்கிழமை (நவ.5) இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீசோமாஸ்கந்தா் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.