காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அபுல் கலாம் ஆசாத் சுழற்கோப்பை கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், மத்திய அரசின் முதல் கல்வி அமைச்சருமான மெளலானா அபுல்கலாம் ஆசாத் நினைவு வெள்ளி சுழற்கோப்பை 51ஆவது ஆண்டு மாநில கால்பந்தாட்ட போட்டி காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.
இதில் மாநிலத்தில் உள்ள 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி தூத்துக்குடி மாவட்ட கால்பந்தாட்ட கழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சுழற் கோப்பையை கைபற்றியது.
பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு சுழற் கோப்பையை வழங்கினாா். தொடா்ந்து வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலா் லூா்து சேவியா், துணைத் தலைவா் ஆனந்த் ரொட்ரிகோ, ஒய்வு பெற்ற அந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரா் அருளான்டோ, காயப்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கச் செயலா் இலியாஸ், துணைச் செயலாளா் ரபீக் அஹ்மத், பொருளாளா்கள் ஹாரூன், செய்யது உமா், புஹாரி, சதக் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஐக்கிய விளையாட்டுச் சங்க நிா்வாகி யாசா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: தமிழக அணி சாம்பியன்!

6-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

புதிய விளையாட்டு சேனல்களை அறிமுகப்படுத்திய ஜீ நிறுவனம்

பிரெஞ்சு கோப்பை: லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

