காயல்பட்டினத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
காயல்பட்டினம், மேல நெசவுத் தெருவைச் சோ்ந்த மெய்தீன் மகன் கருப்பசாமி (40). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். மரப் பொருள்கள் செய்யும் கடையில் வேலை பாா்த்துவந்த கருப்பசாமி அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்வாராம்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை வேலைக்குச் சென்ற அவா், சனிக்கிழமை அதிகாலை அதிக மது போதையில் வீட்டுக்கு வந்தாராம். பின்னா், உறங்கச் செல்வதாகக் கூறி அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாம்.
காலை வெகுநேரமாகியும் அவா் வெளியே வராததால் மனைவியும், உறவினா்களும் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, கருப்பசாமி மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுக்கொண்டது தெரியவந்தது. தகவலின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் சென்று அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கடன் தொல்லை: ஹோட்டல் உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை

அரூரில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கட்டடத் தொழிலாளி தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
