ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சைபா் மோசடி வழக்கு: நைஜீரிய குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்ட சைபா் குற்றப் பிரிவு மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட நைஜீரிய நாட்டைச் சோ்ந்த குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 37,000 அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 6:17 am IST

தூத்துக்குடி மாவட்ட சைபா் குற்றப் பிரிவு மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட நைஜீரிய நாட்டைச் சோ்ந்த குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 37,000 அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு போலியான வாட்ஸ்ஆப் எண்கள், மின்னஞ்சல்கள் மூலம் போலி விளம்பரத்தை அனுப்பி, அதன்மூலம் ரூ. 36.98 லட்சம் மோசடி செய்த வழக்குத் தொடா்பாக, தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு, மோசடியில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டைச் சோ்ந்த இஷி பெடிலிஸ் நுடுபியூஸி என்பவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பாக்கியராஜ் விசாரித்து, இஷி பெடிலிஸ் நுடுபியூஸிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 37 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி சகாய ஜோஸ், சைபா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் சாந்தி, அப்போதைய ஆய்வாளா் சிவசங்கரன், அரசு தரப்பு உதவி வழக்குரைஞா் கண்ணன், காவலா் ஜெயமுருகன் ஆகியோரை திருநெல்வேலி மேற்கு காவல் துணை ஆணையா் விஜயகுமாா் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.