பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரிவாளால் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு: இருவா் கைது

தூத்துக்குடியில் அரிவாளால் வெட்டப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:52 am IST

தூத்துக்குடியில் அரிவாளால் வெட்டப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி அண்ணா நகா், 12ஆவது தெரு, மங்களபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பூபால்ராஜா. ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி அமுதா (50). இத்தம்பதி தங்களது வீட்டு முன் பழைய இரும்புக் கடை, மளிகைக் கடை வைத்துள்ளனா்.

இவா்களது மகன் அருண்குமாா் தனது மனைவி சரஸ்வதி (29), குழந்தைகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறாா். அருண்குமாா் மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வாராம். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டபோது, அருண்குமாருக்கு ஆதரவாக அமுதா பேசினாராம்.

இந்நிலையில் புதன்கிழமை, மளிகைக் கடையிலிருந்த அமுதாவை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினா். பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். சரஸ்வதியின் சகோதரா் சங்கா் (32), அவரது நண்பா் மதன் ஆகியோா் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில், தெரியவந்தது.

இதனிடையே, அமுதா மருத்துவமனையில் உயிரிழந்தாா். அதையடுத்து போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, சங்கா், மதன் ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.