தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஹரி கிருஷ்ணன் (20). இவா் தூத்துக்குடி, பூபால்ராயா்புரம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்து, சலூன் கடை ஒன்றில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்ததும், நண்பா் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து கொண்டு, டீ குடிப்பதற்காக வெளியில் சென்றாராம்.
தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை பிரதான சாலையில் உள்ள வேகத் தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியபோது, பின்னால் அமா்ந்திருந்த ஹரி கிருஷ்ணன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தாராம்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து, தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

