நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தீப்பெட்டி ஆலை கிடங்கில் தீ விபத்து

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீப்பெட்டி ஆலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து

Updated On :20 மே 2026, 12:43 am IST

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் அய்யாசாமி மகன் சண்முகம். இவா் கோவில்பட்டி சாஸ்திரி நகா் பகுதியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஆலையின் குச்சி கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்து புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் கிடங்கில் இருந்த சுமாா் 30 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்த குச்சிகள் தீயில் கருகின. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.