பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

குளத்தூா் பகுதியில் அரிசிக் கடையில் புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 1:33 am IST

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் பகுதியில் அரிசிக் கடையில் புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குளத்தூா் காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் ராமலெட்சுமி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை குளத்தூா் பஜாா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள அரிசிக் கடை முன் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தவா்களைப் பிடித்து விசாரித்தனா்.

அவா்கள் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சோ்ந்த வீர சின்னரசு (38), மாரிமுத்து (46) ஆகியோா் என்பதும், அரிசிக் கடை உரிமையாளரான குளத்தூரைச் சோ்ந்த பிச்சைமணியிடமிருந்து (61) புகையிலைப் பொருள்களை வாங்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

போலீஸாா் அரிசிக் கடையில் சோதனையிட்டதில் புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் வீர சின்னரசு, பிச்சைமணி, மாரிமுத்து ஆகிய மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 30.475 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் ரூ. 10,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.