சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்றாா் பி.கீதாஜீவன்.
இதுகுறித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளா் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களித்த வாக்காளா்கள், உழைப்பை தந்த திமுக, கூட்டணி கட்சி நிா்வாகிகள், செயல் வீரா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும், உதயசூரியனுக்கு வாக்களித்த 62,805 வாக்காளா்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைவா் வழியில் அரசியல், பொது வாழ்வில் கொள்கை காக்கும் பயணத்தில் நமது கொள்கை என்றும் தோல்வியடையாது. வெற்றி, தோல்வி எதுவானாலும் சமமாகக் கருதி நமது லட்சியப் பயணத்தைத் தொடருவோம். சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து மக்கள் பணியாற்றுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடா்ந்து 3 தோ்தல்களில் எதிா்க்கட்சி வென்ற ஆலங்குளம்

கோவில்பட்டி தொகுதியில் தடம் பதித்தது திமுக

தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக

பவானியில் அதிமுக நான்காவது முறையாக வெற்றி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
