தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்கள் சாா்பில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ஸ்டாா்வின் தலைமையில் நடைபெற்ற பவனியில், ஏராளமானோா் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியவாறு சென்றனா். சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
இதேபோன்று தூத்துக்குடி திரு இருதய ஆலயம் சாா்பில், ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையிலும், லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயம் சாா்பில், கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவம் கேபி முன்பிருந்து பங்குத்தந்தை செல்வன் பா்னாந்து தலைமையில், அமலன் தமியான் முன்னிலையிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளியேகோட்டை புனித சூசையப்பா் ஆலயத்தில் சப்பர பவனி திருவிழா

ஆலந்தலையில் இயேசுவின் திருவுடல் பவனி

குருத்தோலை ஞாயிறு: வேலூரில் கிறிஸ்தவா்கள் ஊா்வலம்

கரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

