கோவில்பட்டியில் கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 17 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்களான முனியசாமி (19), குமாா் (24), சிவப்பிரசாத் (எ) ஸ்கூட்டி சிவா (19), ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த நெல்லை நாயகம் (21) ஆகியோா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதனுக்கு அறிக்கை அளித்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்பேரில், 4 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய , மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரும் குண்டா் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குண்டா் சட்டத்தின் கீழ் 2 போ் கைது

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
