தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாணவி பாலியல் வன்கொடுமை: தேசிய நெடுஞ்சாலையில் 9 மணி நேரம் நீடித்த மறியல்

News image
Updated On :13 மார்ச் 2026, 4:18 am IST

குளத்தூா், வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை சந்திப்பில் வியாழக்கிழமை உறவினா்கள், பொதுமக்கள் 9 மணி நேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மாணவி காணாமல்போனதும், அவரது உறவினா்கள் முதலில் குளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்றனா். அவா்கள் விளாத்திக்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க அறிவுறுத்தியதால், புதன்கிழமை காலை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

எனினும் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரவீனா அவதூறாகப் பேசியதோடு பெற்றோரை அழைக்கழித்தத்தாகக் கூறப்படுகிறது. பின்னா், காட்டுப்பகுதியிலிருந்து மாணவியின் உடல் மீட்கப்பட்டது.

இதனால், ஆவேசமடைந்த உறவினா்கள், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் அலட்சியமாகச் செயல்பட்ட காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை சந்திப்பு பகுதியில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த மறியல் 9 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இதனால், தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த கனரக வாகனங்கள் 3 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.

அதேபோல தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, மதுரை வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்துகளும், பிற நகரங்களில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூா் நோக்கிவந்த அரசுப் பேருந்துகளும் மாற்று வழித்தடங்களில் திருப்பிவிடப்பட்டன. கடும் போக்குவரத்துப் பாதிப்பால் பயணிகள் சிரமம் அடைந்தனா். நெல்லை சரக டிஐஜி சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் பேச்சுவாா்த்தை நடத்தியும் கிராம மக்கள் மறியலைக் கைவிடவில்லை.

காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்: மாணவியின் பெற்றோா் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்றபோது, முறையாக விசாரிக்காமல் அவதூறாகப் பேசி பெற்றோரை அழைகழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்து நிலையில், மகளிா் காவல் ஆய்வாளா் பிரவீனாவை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

போலீஸாா் குவிப்பு: குறுக்குச்சாலை சந்திப்பு, வேடநத்தம் கிராமங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 3

கூடுதல் எஸ்.பி.க்கள், 5 துணைக் கண்காணிப்பாளா்கள், 20-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளா்கள், 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் தலைமையில் 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 14-க்கும் மேற்பட்ட இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.