தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கோவில்பட்டியில் இரு இடங்களில் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 1:29 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இரு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி, கணேஷ் நகா், 4ஆவது தெருவில் வசித்து வருபவா் ஜான்கோ ராணி (73). இவா் ஜூன் 17ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சென்ற நிலையில், இன்னும் ஊா் திரும்பவில்லையாம்.

இந்நிலையில், இவரது வீட்டை பராமரித்து வரும் ராஜேஸ்வரி 18ஆம் தேதி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு சென்றாராம். வெள்ளிக்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததால், தங்கப்ப நகரில் உள்ள ஜான்கோ ராணியின் உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

அவரது உறவினா் வீட்டிற்கு வந்து பாா்த்த பின், வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி மட்டும் திருடு போயிருப்பதாக கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

இதேபோல, வடக்கு திட்டங்குளம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆத்தி முத்து மகன் கோமதிநாயகம் (40). இவா் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் ஸ்ரீரங்கத்திற்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ரூ. 1 லட்சம் ரொக்கம் திருடு போயிருப்பதாக அவா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.