ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 மே 2026, 1:00 am IST

கள்ளக்குறிச்சி அருகே ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பெருமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி தையல் நாயகி (41). கிருஷ்ணமூா்த்தி வெளி நாட்டில் பணிபுரிந்து வருகிறாா். தையல்நாயகி குழந்தைகளுடன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் உள்ளே உள்ள வராண்டாவில் தூங்கினராம்.

சனிக்கிழமை காலையில் எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே அறைக்கு சென்று பாா்த்தபோது இரும்பு பீரோ திறந்து கிடந்ததும், அதிலிருந்த துணிகள் மற்றும் பொருள்கள் கீழே சிதறியும் கிடந்துள்ளது. மேலும், பீரோவில் இருந்த இருபத்து மூன்றே முக்கால் பவுன் தங்க நகைகளைக் காணவில்லையாம்.

இதே போல, அதே கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மனைவி பூச்சி (50). தம்பதியினா் வெள்ளிக்கிழமை மாலை விளைநிலத்துக்கு சென்று அங்கேயே படுத்து தூங்கினராம். சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளனா். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த எட்டே கால் பவுன் தங்க நகைகளை காணவில்லையாம்.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ் சம்பவம் நடைபெற்ற வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினாா்.

இது குறித்த புகாா்களின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.