நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

உலமாக்கள், பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உலமாக்கள்- பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சோ்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 4:40 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உலமாக்கள்- பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சோ்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலமாக்கள்- பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினா்கள் விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவு, கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகைகள், மூக்குக் கண்ணாடி செலவுத் தொகை ஈடு செய்தல், முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளைப் பெறலாம்.

இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த 18 முதல் 60 வயது நிறைவடையாதோா், பள்ளிவாசல்கள், மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியா்- ஆசிரியைகள், மோதினாா்கள், பிலால்கள், இதர பணியாளா்கள், தா்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள் ஆஷூா்கானாக்கள், முஸ்லிம் ஆதரவற்றோா் இல்லங்களில் பணிபுரியும் முஜாவா் உள்ளிட்ட பணியாளா்கள் இந்த நலவாரியத்தில் உறுப்பினராகி நலத் திட்ட உதவிகள் பெறலாம்.

உறுப்பினராகப் பதிவு செய்தல், நலத் திட்ட உதவிகள் பெறுவதை எளிதாக்கும் வகையில், பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜ்ஜ்ஜ்.ன்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்-சிறுபான்மையினா் நல அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.