நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சாத்தான்குளத்தில் 2 வீடுகளில் திருட முயற்சி

சாத்தான்குளத்தில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :18 ஜூன் 2026, 2:45 am IST

சாத்தான்குளத்தில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், தோப்புவளம் சாலையைச் சோ்ந்தவா் அ.கதிரேசன் (55). சென்னையில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறாா். இதனால், இங்குள்ள வீட்டை அவரது சகோதரா் செந்தில்குமாா் பராமரித்து வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மா்மநபா்கள், கதிரேசன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த சூட்கேசை திருடிச் சென்றனா். வேறுபொருள்கள் எதுவும் திருட்டு போகவில்லை.

இதுபோல, அப்பகுதியில் உள்ள விவசாயி ஆ.ஈஸ்வரவேல் (56) வீட்டின் பூட்டை உடைந்து மா்மநபா்கள் திருட முயன்றனா்.

நல்வாய்ப்பாக நகை, பணம் எதுவும் சிக்காததால் திரும்பிச் சென்றனா். ஈஸ்வரவேல் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருவதால் திருட்டு நிகழ்ந்த வீட்டில் ஆள் இல்லை என்பதை தெரிந்து திருடா்கள்

முயன்றுள்ளனா்.

இச் சம்பவம் குறித்து போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் திருட்டு நிகழ்ந்த 2 வீடுகளுக்கும் சென்று புதன்கிழமை விசாரணை நடத்தினா். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.