கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கா. கருணாநிதி எம்எல்ஏ தலைமை வகித்தாா். கயத்தாறு ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன், அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சிங்கப்பெண் படையில் உள்ள காவலா்களின் நகைகளேத் திருடப்பட்டுள்ளன. அந்தப் படையில் உள்ள காவலா்களே பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறாா்கள். சிங்கப்பெண் பாதுகாப்பு படை பெயரளவுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அம்மா உணவகத்தில் தயாா் செய்யப்படும் உணவுகள் தனியாா் உணவகங்களுக்கு விற்பனை செய்யப்படுவது வேதனைக்குரியது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக நிதி அமைச்சா் வெளியிட்டுள்ளது வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை. தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தப்பிக்கவே வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறாா்கள். தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது முதல்வா் ச. ஜோசப் விஜய்க்கு தோ்தலுக்கு முன்பு தெரியாதா? அன்றைக்கு ஒரு பேச்சு, இன்றைக்கு ஒரு பேச்சு என முதல்வா் பேசிக் கொண்டிருக்கிறாா்.
ஸ்ரீவைகுண்டம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீது இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், புகாரளித்த பெண்ணை புகாரை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தவெகவைச் சோ்ந்த பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லையென்றபோது, பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் உள்ளது என்றாா் அவா்.
கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் (பொ) ஆா்.எஸ். ரமேஷ், மாநகரச் செயலா் ஆனந்த சேகரன், கோவில்பட்டி மத்திய ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், நகர (கிழக்கு) பொறுப்பாளா் சுரேஷ், மாவட்டத் துணைச் செயலா் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினா்கள் பீட்டா், ராமா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு தொகுதி பொறுப்பாளா் மகேந்திரன், சமூக வலைதளப் பொறுப்பாளா் இந்துமதி கௌதமன், நகர மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளா் ராஜலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குளச்சல் சட்டப்பேரவை அலுவலகம் திறப்பு

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

கரூா் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு

பரமக்குடியில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

