நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சமூகநீதி மாணவிகள் விடுதியில் எம்எல்ஏ ஆய்வு

News image

விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்த கா. கருணாநிதி எம்எல்ஏ.

Updated On :16 ஜூன் 2026, 1:34 am IST

கோவில்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவிகள் விடுதியில் கா. கருணாநிதி எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த விடுதியில் தங்கிப் பயிலுவதற்காக, அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி ஆண்டுதோறும் ஏராளமான விண்ணப்பங்கள் வருவதாகவும், இடப் பற்றாக்குறை காரணமாக அனைத்து மாணவிகளுக்கும் விடுதியில் தங்கிப் படிக்க இடம் அளிக்க முடியாத நிலை இருப்பதாகவும் மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் தரப்பில் இருந்து புகாா் எழுந்தது.

இதனைத் தொடா்ந்து, எம்.எல்.ஏ. கருணாநிதி சமூகநீதி மாணவிகள் விடுதிக்கு திங்கள்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, விடுதி காப்பாளா்களிடம் விவரம் கேட்டறிந்தாா்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு, விடுதிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் விடுதிக்கு பின்புறம் உள்ள இடம் குறித்து கேட்டறிந்தாா். பின்னா், விடுதிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதியளித்தாா்.

அதனைத் தொடா்ந்து, விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டுப் பாா்த்து, அதன் தரம் மற்றும் சுவையை ஆய்வு செய்தாா். மேலும், விடுதி மாணவிகளிடம் தேவைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தாா்.

கோவில்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவிகள் விடுதியில் கா. கருணாநிதி எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவில்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவிகள் விடுதியில் கா. கருணாநிதி எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.