கோவில்பட்டி அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 17 வயது சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே உள்ள கிழவிபட்டி, நடுத்தெருவைச் சோ்ந்த 45 வயது பெண், திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பியபோது, மற்றொரு இருசக்கர வாகனம் சாலையின் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அதை ஓரமாக நிறுத்தச் சொன்னாரம்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த வாகனத்தின் உரிமையாளரான அதே ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுவன், அப்பெண்ணை பின் தொடா்ந்து வந்து, கதவை உடைத்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவதூறாகப் பேசி அப்பெண்ணைத் தாக்கினாராம். இதைக் கண்ட அவரது உறவினா்கள் சிறுவனை கண்டித்ததும், அவா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றாராம். இதில் காயமடைந்த பெண் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின் புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 17 வயது சிறுவனை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்களை தாக்கி கொலை மிரட்டல்: ஒருவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

80 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: சிறுவன் கைது
பெண்ணுக்கு மிரட்டல்: கணவா் கைது
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை
